மங்காத்தா டா – எவ்வளவு இலட்சம்!! எவ்வளவு கோடி !!!


Number's Chart

தமிழ் எண்கணிதம் – பள்ளிக்கூடத்துல படிக்கும்போது வாய்ப்பாட்டுல இருக்கற தமிழ் எண்கணிதத்தை பாத்ததோட சரி. அதுக்கு அப்புறமா தமிழ் எண்கணிதம் பத்தி நினைச்சது கூட இல்ல.  இன்னிக்கு எதேச்சையா இந்த number எல்லாம் பாத்தபோது- ஒரு நிமிஷம் அப்பிடியே தலை சுத்திருச்சு.

நல்ல விஷயம் தான, தெரிஞ்சுகிட்டா தப்பே இல்ல.
வாங்க தெரிஞ்சுக்குவோம்.

தமிழ்  எண்கணிதம்

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000
௰௱௱௲ = 100,000,000
௱௱௱௲ = 1,000,000,000
௲௱௱௲ = 10,000,000,000
௰௲௱௱௲ = 100,000,000,000
௱௲௱௱௲ = 1,000,000,000,000
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000

ஏறுமுக இலக்கங்கள்:

1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1,000= ஆயிரம்
1,00,000 = லட்சம்
1,00,00,000 = கோடி
10,00,00,000 = அற்புதம்
1,00,00,00,000 = நிகற்புதம்
10,00,00,00,000 = கும்பம்
1,00,00,00,00,000 = கணம்
10,00,00,00,00,000 = கற்பம்
1,00,00,00,00,00,000 = நிகற்பம்
10,00,00,00,00,00,000 = பதுமம்
1,00,00,00,00,00,00,000 = சங்கம்
10,00,00,00,00,00,00,000 = வெள்ளம்
1,00,00,00,00,00,00,00,000 = அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 = அற்ட்டம்
1,00,00,00,00,00,00,00,00,000 = பற்றட்டம்
10,00,00,00,00,00,00,00,00,000 = பூறியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 = முக்கோடி
10,00,00,00,00,00,00,00,00,00,000 = மகாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்:

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

தரவு- https://en.wikipedia.org/wiki/Tamil_numerals
இப்போ சொல்லுங்க இது எவ்வளவு 594726850269841?

தமிழ்: ஐந்து பதுமத்து ஒன்பது நிகற்பத்து நான்கு கற்பத்து ஏழு கணத்து இரண்டு கும்பத்து ஆறு நிகற்புதத்து எட்டு அற்புதத்து ஐந்து கோடியேயே இரண்டு லட்சத்துஅறுபத்தொன்பதாயிரத்து எண்ணூற்று நாற்பத்தொன்று!

English: Five Hundred Ninety-Four Trillion Seven Hundred Twenty-Six Billion Eight Hundred Fifty Million Two Hundred Sixty-Nine Thousand Eight Hundred Forty-One

இந்தமாதிரி number aha தமிழ் ல பாக்குறதுக்கு இந்த website பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

By subscribing, you agree to our Privacy Policy. You may unsubscribe at any time.