Piravi endra thoondil mullil


Piravi Endra- Thoondil Mullil

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்று
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்

யார் விழியில்
யார் வரைந்த கனவோ?
பாதியிலே கலைந்தால், தொடராதோ?
ஆள் மனதில், யார் விதைத்த நினைவோ?
காலமதை சிதைத்தும், மறக்காதோ?

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்று
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்

ஆஹா, வீழும் முன் அந்த கண்ணீர் துளி
கரையும் அந்த மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே
காயம் ஆறும் இந்த புன்னகைகள்
உரைக்கும் முன்ன காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன
பதிக்கும் முன்னே
உதிர்ந்து போன முத்தம் ஏராளம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்று
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்

Song Details

Video:

By subscribing, you agree to our Privacy Policy. You may unsubscribe at any time.