இரவின் மடியில் – மனதிற்கு இனிய பாடல்கள்


Iravin Madiyil - Suryan FM

இரவின் மடியில் – 2005 ஆம் ஆண்டு சூரியன் பண்பலையில் ஒலிபரப்பப்பட்ட எனது தந்தையின் கடிதம். பிடித்தபாடல்களும், காரணங்களும்!

கொங்கு மண்டலமாம் கோவை மாநகரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் பொள்ளாச்சி மெயின்ரோட்டில் அமைந்துள்ள அழகிய, அமைதியான, பசுமையான கிராமம் ஒத்தக்கால்மண்டபம் எனது சொந்த ஊர். பள்ளி இறுதி வகுப்புவரை படித்து பாஸ் செய்துள்ள நான் ஒரு தனியார் நூற்பாலையில் 20 வருடங்கள் பணிபுரிந்து VRS என்ற பெயரில் வெளியேற்றப்பட்டவன். கூடா நட்பால் வாழ்க்கையில் வசந்தங்களை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருப்பவன்.

கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் போரடிக்கொண்டிருக்கும் நான் எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம் என தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பவன். பழைய பாடல்களை விரும்பி கேட்கும் நான் சோக பாடல்களில் தனி சுகம் காண்பவன். என்னை பற்றி இது போதுமே என்று தன்னை பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டார் பொன்னுசாமி…

List of songs in this playlist:

  1. மயக்கம் எனது தாயகம் from the movie குங்குமம்
  2. யாருக்கு நான் தீங்கு செய்தேன் from the movie ஆயிரம் காலத்து பயிர்
  3. சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் from the movie முத்து மண்டபம்
  4. சிந்தித்தால் சிரிப்பு வரும் from the movie செங்கமலத்தீவு
  5. கடவுள் ஏன் கல்லானான் from the movie என் அண்ணன்
  6. ஊரார் அடித்துவிட்டால் from the movie தாயில்லா பிள்ளை
  7. கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ from the movie கைராசி
  8. பசுமை நிறைந்த நினைவுகளே from the movie ரத்தத் திலகம்
  9. ஆசையே அலை போலே from the movie தை பிறந்தால் வழி பிறக்கும்
  10. செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் from the movie யானை பாகன்

இவற்றில் முத்தான பாடலாக ‘சிந்தித்தால் சிரிப்பு வரும்’ என்ற பாடலை தெரிவு செய்திருப்பார் நிகழ்ச்சி தொகுப்பாளரான RJ லக்ஷ்மி நாராயணா. இந்த பத்து பாடல்களில் தங்களுக்கு பிடித்த பாடல் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய மறக்காதீர்!

பங்கேற்பாளர்:
பொன்னுசாமி, ஒத்தக்கால்மண்டபம், கோயம்புத்தூர்.

தொகுப்பாளர்:
R.G. லக்ஷ்மி நாராயணா, சூரியன் பண்பலை, கோயம்புத்தூர்.

ஒலிபரப்பு:
2005

தொகுப்பு:
செந்தில்பிரபு பொன்னுசாமி.

இரவின் மடியில் – மனதிற்கு இனிய பாடல்கள்!
You can also enjoy the tracks on Soundcloud.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

By subscribing, you agree to our Privacy Policy. You may unsubscribe at any time.